“என் தங்கச்சி கிட்டயே வாட்ஸ்-ஆப்ல சாட் பண்றியா?”... கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 23, 2020 02:09 PM

ஓமலூர் அருகே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரிடம், சக மாணவர் வாட்ஸ்-ஆப்பில் பேசியதால், அம்மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

student assauloted for whatsapp chat with college girl

சேலம் மாவட்டத்துக்கு உட்பட ஓமலூர் அருகே உள்ள கோட்ட மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன், சேலம் அரசுக் கலைக்கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் நட்பாகியதை அடுத்து, அவருடன் வாட்ஸ்-ஆப்பில் பேசி வந்துள்ளார்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் தரப்பு, ஹரிஹரினின் பெற்றோரிடம் இதனை புகாராக முன்வைத்தனர்.  இதனால் ஹரிஹரனின் பெற்றோர் ஹரிஹரனை கண்டித்துள்ளதாகவும், இதனையடுத்து ஹரிஹரனும் அம்மாணவியிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. ’

ஆனால் மாணவியின் அண்ணன் சச்சின் என்பவர் மது அருந்திவிட்டு வந்து, நேற்று இரவு ஹரிஹரனை சந்தித்ததோடு, ஹரிஹரனையும், அவரது நண்பர் முரளிதரனையும் அப்பகுதியில் உள்ள ஏரி அருகே அழைத்துச் சென்று, ‘என் தங்கச்சிகிட்டயே வாட்ஸ்-ஆப்ல பேசுவியா?’ என்று தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இதனால் முரளிதரன் சச்சினை எதிர்க்க, முரளிதரன் தனது வண்டிசாவியுடன் வைத்திருந்த கத்தியை எடுத்து ஹரிஹரன் மற்றும் முரளிதரன் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தலை, முகம், கை என காயப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #COLLEGESTUDENT #OMALUR #SALEM #WHATSAPP