நிறுத்தும்போது ‘நிலைதடுமாறிய’ வாகனம்... ‘எதிரே’ வந்த லாரி... ‘நண்பர்கள்’ கண்முன்னே நேர்ந்த ‘சோகம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 21, 2020 01:57 PM

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த நபர்மீது லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Puducherry Man Died Infront Of Friends In Lorry Bike Accident

கடலூரைச் சேர்ந்த முருகன் என்பவர் நேற்று முன்தினம் நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் தூக்கனாம்பாக்கம் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அவர்கள் குருவிநத்தம் தூக்குபாலம் அருகே போய்க்கொண்டிருந்தபோது, முருகன் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழ, சில நொடிகளில் எதிரே வந்த லாரியின் பின்சக்கரம் கீழே விழுந்திருந்த முருகன் மீது ஏறியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்தில் நண்பர்கள் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags : #ACCIDENT #PUDUCHERRY #LORRY #BIKE #FRIENDS