'கடிதம்' எழுதி வைத்து விட்டு... 'தற்கொலை' செய்துகொண்ட... பிரபல 'சைக்கிள்' நிறுவன அதிபரின் மனைவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டில் மகனும், மகளும் இருக்கும்போதே அட்லஸ் சைக்கிள் நிறுவன அதிபரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் டெல்லியில் உள்ள தன்னுடைய வீட்டில் அட்லஸ் சைக்கிள் நிறுவன அதிபர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷா கபூர்(57) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் வீட்டினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக்கு முன் நடாஷா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் தன்னுடைய தங்கையை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி அவர் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நடாஷாவின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
