'ஏற்கனவே அவர் கூட வந்த அந்த 2 பேரும் என்கிட்ட..'. 'வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து...' விசாரணை என்ற பெயரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலர் தன்னை கைவிட்டுச் சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த இளம்பெண்ணை போலீஸ் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அரண்டால்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை ஓராண்டாக காதலித்த வாலிபர் தற்போது திருமணத்திற்கு மறுக்கிறார் என்று அதே ஊரில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் புகார் கொடுத்தார்.
இளம்பெண் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் எஸ்ஐ பாலகிருஷ்ணா வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் தினமும் அவருடைய வீட்டிற்கு சென்ற எஸ்.ஐ பாலகிருஷ்ணா, நேற்று முன்தினம் இளம் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத போது அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
அவருடன் சென்றிருந்த ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய 2 போலீசாரும் தங்களுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணை வற்புறுத்தினர். ஆனால் அந்த இளம்பெண் அதை மறுக்கவே, விசாரணை என்ற பெயரில் வீட்டுக்கு வந்த எஸ்.ஐ.பாலகிருஷ்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொலைபேசி மூலம் மாவட்ட எஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த தகவல் அடிப்படையில் குண்டூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எஸ்.ஐ பாலகிருஷ்ணா, அவருடன் சென்ற ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய இரண்டு போலீசார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ பாலகிருஷணா, ராமு, ஹனுமந்த ராவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
