“சிறார் வதை வீடியோ விவகாரம்!” .. “அம்பத்தூர் இளைஞரைத் தொடர்ந்து, கரூரில் சிக்கிய வடமாநில இளைஞர்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறார் வதை வீடியோக்களை பார்த்ததுடன், அவற்றை பதிவிறக்கம் செய்ததற்கும், அதை பகிர்ந்ததற்கும் கரூரை சேர்ந்த வடமாநில இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறார் வதை வீடியோக்களை பார்ப்பதும், தரவிறக்கம் செய்வதும், பரப்புவதும், பகிர்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கபட்டுள்ளதோடு, அவ்வாறு செய்பவர்களை போலீஸார் அவர்களது செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐபி முகவரி ஆகியவற்றின் மூலம் கண்டறிந்து கைது செய்து வரும் நிகழ்வு கடந்த ஒரு மாதமாக தீவிரமாகிக் கொண்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறை எச்சரித்தும் வருகிறது. இந்த சூழ்நிலையில்தான், சிறார் வதை வீடியோக்களை பார்த்ததற்காதாகவும், பகிர்ந்ததற்காகவும் வடமாநில இளைஞர் நியாஸ் அலி (வயது 23) என்பவரை, கரூர் நகர காவல்நிலைய போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாகக் கரூரில் தங்கி அங்குள்ள, வையாபுரி நகரில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் உள்ள சலூன் கடை ஒன்றில் பணியாற்றி வரும் ரியாஸ் அலி என்ற இளைஞர், தனது செல்போனில் ஆபாச படங்களைப் பார்த்ததோடு, அதைப் பதிவிறக்கம் செய்து, தனது நண்பர்களுக்கும் பகிர்ந்து வந்துள்ளதை அடுத்து கரூர் நகரக் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் கார்த்தி வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டம் 67 ஏ, 67 பி, 67 பி பி ஐ.டி சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறையில் அடைத்தார்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளம் பட்டதாரி இளைஞர் ஒருவர் சிறார் வதை வீடியோக்களைப் பார்த்த குற்றத்துக்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, கரூரில் நடந்துள்ள இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
