விடுமுறை தினத்தில்... 'சென்னையில்' உள்ள ஒயின் ஷாப்புகளை 'மூட' உத்தரவு... காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 31, 2020 12:34 AM

வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து ஒயின் ஷாப்புகள், பார்கள், மதுபானக்கடைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

Tasmac will be shutdown on February 8th, details here

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் ஐ.எம்.எஃப்.எல் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் இணைக்கப்பட்ட பார்கள், கிளப்களில் இயங்கும் எஃப்.எல் 2 பார்கள், ஹோட்டல்களில் இயங்கும் எஃப்.எல் 3 பார்கள் மற்றும் எஃப்.எல் 3 (ஏ) உரிமம் பெற்ற தமிழ்நாடு சுற்றுலா ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும்,'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அன்று விடுமுறை தினமாக இருப்பதால் முதல்நாள் இரவே மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பிளாக்கில் பதுக்கும் குற்ற செயல்களை தடுக்க, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காவல்துறையினர் இதுகுறித்து அலெர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.