டிக் டாக் தோழியுடன் 'வீட்டைவிட்டு' ஓடிப்போன கணவர்... ஏகப்பட்ட பெண்களுடன் 'தொடர்பு' வைத்திருக்கிறார்... மனைவி பகீர் புகார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 22, 2020 10:50 PM

வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்ற இளைஞர் டிக் டாக் தோழியை திருமணம் செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Wife complained about Husband to Police in Cuddalore

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலைப்புலியூரை சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்னும் பெண்ணை 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜசேகர் மது அருந்திவிட்டு தன்னை அடித்து உதைப்பதாகவும், டிக் டாக்கில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கடந்த ஆண்டு சுகன்யா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்ற ராஜசேகர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என கவிநயாவின் உறவினர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை விசாரித்த அறந்தாங்கி காவல்துறையினர் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், ராஜசேகருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

போலீசார் சுகன்யாவிடம் விசாரித்தபோது வேலைக்கு செல்வதாக கூறி சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். காணாமல் போன ராஜசேகர்-கவிநயா இருவரும் டிக் டாக்கில் ஒன்றாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதைப்பார்த்த போலீசார் இருவரும் திருமணம் செய்துகொண்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ள விவரத்தை சுகன்யாவிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

தன்னுடைய கணவர் ராஜசேகர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வருவதாகவும், அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் போலீசாரிடம் கூறிய சுகன்யா தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் குடும்பங்களை சீரழிக்கும் டிக் டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : #POLICE