“வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்!”.. “உலகை உலுக்கிய கூடைப்பந்து வீரரின் மரணம்!”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்!”
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் என்பவர் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் பலியாகியுள்ள சம்பவம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து தன் மகளுடன் ஹெலிகாப்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான், இந்த கோரமான விபத்து சம்பவம் நடைபெற்றதாகவும் அதில் அவருடைய 13 வயது மகளும், ஹெலிகாப்டர் பைலட்டும் மேலும் 5 பேரும் அவருடன் சேர்ந்து பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணகான ரசிகர்களைக் கொண்டுள்ள கோப் பிரயண்ட்டின் இந்த நெஞ்சை உலுக்கும் மரண சம்பவம் குறித்து அமெரிக்க போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags : #ACCIDENT #KOBE BRYANT #BASKET BALL PLAYER
