‘முதலில் தாய், அடுத்து கூட்டாளி’.. கட்டிலில் வைத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. மகனின் பகீர் வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்திற்காக தாயைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் முக்கம் பகுதியை சேர்ந்தவர் பிர்ஜூ. இவர் கடந்த 2014-ம் ஆண்டு சொத்திற்காக தனது தாய் ஜெயவல்லியை இஸ்மாயில் என்ற கூட்டாளியிடம் கூறி கொலை செய்துள்ளார். இதற்காக இஸ்மாயிலுக்கு 10 லட்சம் தருவதாக பிர்ஜூ தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்த தப்பி கூடலூர் பகுதியில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.
இதனிடையே பிர்ஜூ மற்றும் இஸ்மாயில் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாயை கொலை செய்த விஷயத்தை வெளியே சொல்லிவிடுவேன் என இஸ்மாயில் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிர்ஜூ கடந்த 2017-ம் ஆண்டு இஸ்மாயிலை கொலை செய்துள்ளார். இந்த நிலையில் ஜெயவல்லி கொலை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிர்ஜூ கூடலூர் அருகே இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து பிர்ஜூவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திடுக்கிடும் பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அதில், தனது கூட்டாளி இஸ்மாயிலை கொலை செய்த பின்னர், வீட்டில் உள்ள கட்டிலில் வைத்து உடலை துண்டுதுண்டாக வெட்டி, பின் அதனை பைக்கில் வைத்து ஆற்றில் வீசியதாக பிர்ஜூ போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
