‘இறந்தும் 7 பேருக்கு உயிர்கொடுத்த இளைஞர்’.. மனதை உருக வைத்த பெற்றோரின் செயல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 16, 2020 09:13 PM

பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 7 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Paramakudi Parents donate their dead son\'s organs

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காந்தி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் சரத்குமார் (21). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜனவரி 11ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பும்போது இருசக்கரத்தில் இருந்து கீழே விழுந்து சரத்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனே அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சரத்குமார் பெற்றோரின் சம்மதத்துடன் அவரது கண்கள், கிட்னி, இதயம், கனையம் உள்ளிட்ட உடலுறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது நண்பர்கள் சுவரொட்டிகள் ஒட்டி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர். அதில், ‘அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டவும், இது சர்த்குமாரின் வேண்டுகோள்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

Tags : #PARAMAKUDI #PARENTS #ORGANDONATION