‘பெற்றோர் அலட்சியத்தால்’.. ‘வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த’.. ‘3 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 01, 2019 11:28 PM

ஆம்பூர் அருகே பெற்றோர் அலட்சியத்தால் தண்ணீர் டிரம்முக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ambur 3 YO Girl Baby Dies after falling into Water Drum

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்பதி வீரமணி - ரம்யா. இவர்களது 3 வயது மகள் யஷ்வந்திகா வீட்டின் அருகே துணி துவைக்கும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம்முக்குள் குழந்தை யஷ்வந்திகா தவறி விழுந்துள்ளார்.

டிரம்முக்குள் இருந்த தண்ணீரில் தலைகீழாக விழுந்ததில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags : #AMBUR #GIRL #BABY #WATER #DRUM #PARENTS #DEAD