‘டிவியில் சுஜித் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த’.. ‘பெற்றோரின் அலட்சியத்தால்’.. ‘2 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 29, 2019 01:43 PM

தூத்துக்குடியில் பெற்றோருடைய அலட்சியத்தால் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Girl Baby dies while parents watching Sujiths rescue on TV

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி லிங்கேஸ்வரன் - நிஷா. இவர்களது 2 வயது மகள் ரேவதி சஞ்சனா. நேற்று மாலை பெற்றோர் டிவியில் குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகளை பார்த்துக்கொண்டிருந்தபோது குழந்தை சஞ்சனா காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் லிங்கேஸ்வரன் வீட்டின் பாத்ரூமில் பார்த்தபோது, அங்கிருந்த தண்ணீர் கேனில் குழந்தை சஞ்சனா தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் இருந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ந்துபோன குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தின் இறப்பு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TUTUCORIN #GIRL #BABY #DEAD #PARENTS #SUJITH #TV #BATHROOM #WATER #TUB