‘செலிபிரிட்டி மாதிரி இருக்கு’.. தலைமுடி வளர்த்தே ‘கின்னஸ்’ ரெகார்ட்.. அசத்திய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண் ஒருவர் 190 செ.மீ நீளத்திற்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (17). கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மாணவியான இவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து டீன் ஏஜர் பிரிவில் கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஏபிரில் என்ற பெண் 152.5 செ.மீ தலைமுடி வளர்த்து சாதனை படைத்தார். பின்னர் இந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 செ.மீ தலைமுடி வளர்த்து அந்த சாதனையை முடிவெடித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு 170 செ.மீ நீளம் தலைமுடி வளர்த்து நிலன்ஷி படேல் இருவரின் சாதனையையும் முறியடித்து கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது 190 செ.மீ நீளம் தலைமுடி வளர்த்து தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நான் எங்கு சென்றாலும் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றனர். அதனால் நான் ஒரு செலிபிரிட்டி போல் உணர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
