வீட்டை விட்டு வெளியேறிய... இளம் காதல் ஜோடிகள்... எடுத்த விபரீத முடிவு... உறைந்து நின்ற பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 04, 2020 09:07 PM

விருதுநகர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி ஒன்று ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lovers Commits Suicide after Run into the Running Train

விருதுநகர் அருகேயுள்ள வில்லிபத்திரி கிராமத்தைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (22). இதேபோல் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் ரஞ்சிதா (22). இருவரும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி பட்டப்படிப்பை படித்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைத் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். நேற்று காலை காதல் ஜோடி இருவரும் வீட்டில் இருந்து வெளியேறினர். நேற்று மாலை 4:30 மணிக்கு விருதுநகர் சூலக்கரை வி.டி. மில் அருகே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்தனர்.

இதில் 2 பேரும் உடல் சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தூத்துக்குடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது பிள்ளைகளை இழந்த பெற்றோர் கதறித் துடித்தனர்.

Tags : #SUICIDE #LOVERS #COUPLE #PARENTS #காதல் ஜோடிகள் #ரயில்