'சமாதானம்' செய்தும் கேட்கல... 'தங்கை' எடுத்த 'விபரீத' முடிவு... காப்பாற்றப் போன ‘அண்ணன்’... சில நிமிடத்தில் நடந்த ‘பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 22, 2019 05:36 PM

கோவையில், பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த தங்கை கிணற்றில் குதிக்க, அவரை காப்பாற்றப் போன புது மாப்பிள்ளையான அண்ணனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

brother and sister died after jumping in well in coimbatore

கோவை மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி - வேலுமணி. இவர்கள் செந்தில்குமார் என்பவரது தோட்டத்தில், தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவருக்கும், இவரது மனைவிக்கும் மகள் முன்னிலையிலேயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவும் வழக்கம்போல் தம்பதிகள் இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களை மகள் சித்ரா (17) சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் மகளின் பேச்சை அவர்கள் காதுகொடுத்து கேட்டதாகத் தெரியவில்லை.

இதில் மனமுடைந்த மகள் சித்ரா, அருகிலிருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனால் பதறிப்போன அண்ணன் அருண்குமார் தங்கையை காப்பாற்ற முயன்று, கொஞ்சம் யோசிக்காமல் வேகத்தில் குதித்துள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால், கிணற்று நீரில் மூழ்டிக பிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார், அண்ணன், தங்கை இருவரின் உடல்களை மீட்டனர். மேலும் அருண்குமாருக்கு திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்ததால், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #PARENTS