கல்யாணமாகி 6 மாதம் தான்... 4 மாத கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு... கதறித் துடிக்கும் தாய், தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 15, 2019 06:49 PM

திருமணமான 6 மாதத்தில் 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pregnant woman commits suicide in mysterious circumstances

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ் நகரத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (23). இவருக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில், 4 மாத கர்ப்பிணியாக இருந்த சிவரஞ்சனி இன்று காலை தூங்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் அங்கு வந்த போலீசார், சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்து வந்த சிவரஞ்சனியின் பெற்றோர், திருமணமான 6 மாதத்தில் மகள் இறந்ததால் கதறித் துடித்தனர். பின்னர், சிவரஞ்சனியின் பெற்றோர் உள்பட அவரது உறவினர்கள், மாப்பிள்ளை ரங்கராஜ் குடும்பத்தினர், தங்களது பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.

மேலும் சிவரஞ்சனியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவர்கள், அவரது உடல் இருந்த அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #PREGNANT #WOMAN #PARENTS