கையில் 'காப்பு' மாட்டியும்... 'ஹார்ட்டின் போஸ்' கொடுத்த சுஜி... குவியும் புகார்களால் 'வேகமெடுக்கும்' வழக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய என்ஜினியர் சுஜி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். பெண்களை ஏமாற்றியது, பெண்களிடம் பணம் பறித்தது, பணம் கேட்டு மிரட்டியது என ஏராளமான வழக்குகள் இவர்மீது உள்ளன. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரது மொபைல், லேப்டாப், ஹார்லி டேவிட்சன் பைக் என ஆகியற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில் சிறையில் உள்ள சுஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நாகர்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் போலீஸார் அவரை நேற்று நேரில் ஆஜர்படுத்தினர். சுஜியைப் பத்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக கோவை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு போலீசார் அவரை அழைத்து சென்று விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக போலீசார் சுஜியை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது அவரை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இதைக்கண்ட அவர் போலீஸ் இருப்பதையும் கண்டு கொள்ளாமல் 'ஹார்ட்டின் போஸ்' கொடுத்து ஷாக் அளித்தார்.