30 ஆண்டுகளுக்கு பின் 'சவுதியில்' இருந்து... திடீரென ஆயுதங்களை 'திரும்பப்பெறும்' அமெரிக்கா... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் இருந்து பெருமளவு ஆயுதங்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கப் படைகள் சவுதியில் இருந்து வருகின்றன. மேலும் அந்நாட்டின் விமான நிலையத்தை தங்கள் போர் விமான ஓடுதளமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. உச்சகட்டமாக கடந்த ஆண்டு சவுதியின் ஆராம்கோ எண்ணெய் வயல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது பலத்தை அங்கு பெருக்கி வந்தது.
இந்த நிலையில் சவுதியில் இருந்து பெருமளவு ஆயுதங்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சவுதியில் தங்கள் ஆயுத பலத்தை அமெரிக்கா பெருக்கியதற்கு ஈரானும் ஒரு காரணம் என்பதால், அமெரிக்காவின் இந்த முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தவறவில்லை.
எனினும் வளைகுடா பகுதியில் அமெரிக்கப்படைகள் இருப்பது தங்களுக்கு பலனளிக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுவதால், அப்பகுதியில் பெருமளவு ஆயுதங்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
