குழந்தைக்கு 'சோறூட்டுவதில்' தகராறு... ஆத்திரத்தில் 'கணவனை' கொலை செய்த மனைவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைக்கு சோறு ஊட்டுவதில் ஏற்பட்ட தகராறில், கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பெல் ஊரகத்தில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ்குமார் சர்மா (37). ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் உதவி பொறியாளர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். மனைவி ஆஷாகுமாரி(27). மகன் அயோக்குமார் (5)ஆகியோருடன் அகிலேஷ்குமாரின் தாய் சாவித்திரி தேவியும் வசித்து வந்தார்.
ஊரடங்கால் அகிலேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மகன் அயோக்குமார் ஒழுங்காக சாப்பிடுவதில்லை என்றும், இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆஷா குமாரி காய்கறி வெட்டும் கத்தியினை எடுத்து அகிலேஷ் குமாரை குத்தி விட்டார்.
இதில் படுகாயமடைந்த அகிலேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆஷா குமாரியை போலீசார் கைது செய்தனர்.
