"காவலர் சீருடையில் வந்து"... "தரதரவென்று இழுத்துப் போய்"... "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு நடந்த கொடூரம்"...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 27, 2020 03:49 PM

காவலர் சீருடையில் வந்த இருவர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

men dressed in police uniform harass two sisters in up

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ளது, பிஜோய் என்ற ஊர். அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தை, போலி மதுபானம் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வது போல், காவல் துறையின் சீருடையில் இருவர் வந்துள்ளனர். வீட்டுக்குள் தடாலடியாக நுழைந்து, அந்த குடும்பத்தின் இரு பெண்களை விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

சீருடையில் வந்தவர்களை காவலர்கள் என நம்பி, அந்தப் பெண்களும் அவர்களுடன் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நடந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட அவ்விரு பெண்களும் வீட்டில் வந்த கூறவே, அந்த குடும்பத்தினர் பிஜோய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, அங்கிருந்த காவல் துறையினர் தங்களுடைய காவலர்கள் யாரும் அந்த பெண்களின் வீட்டிற்கு அனுப்பப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : #RAPE #FAKE #POLICE #UP