அட என்ன இருந்தாலும் ‘கட்டின’ பொண்டாட்டி இல்லையா...! பாவத்த இப்படியா பண்வீங்க...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில், கரும்பு போன்ற சுவையான குறும்புடன் மனைவியை கணவன் தூக்கிக்கொண்டு ஓடும் போட்டி நடத்தப்பட்டது.

தார்சாலையில் நடத்தப்பட்ட இந்தப்போட்டியில் தங்கள் இல்லத்தரசிகளை குழந்தைகளை போல கையில் தூக்கிக் கொண்டும், முதுகில் உப்பு மூட்டையாக சுமந்துக் கொண்டும் ஓட கணவன்மார்கள் தயாராக இருந்தனர்.
போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மனைவியரை தூக்கிக் கொண்டு ஓடினர். மனைவியை குழந்தை போல கையில் தூக்கிச்சென்ற கணவன்மார் 3 பேரும் தங்கள் மனைவியரை நடுரோட்டில் பொத்தென்று போட்டு அவர்களும் விழுந்தனர்.
மனைவியரை உப்புமூட்டை போல சுமந்து சென்ற இருவர் மட்டும் வெற்றிகரமாக எல்லைக்கோட்டை தொட்டனர்
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி குறுகலான சாலையில் நடத்தப்பட்ட இந்த குறும்புத்தனமான போட்டியை பயன்படுத்தி 3 கணவன்மார்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக கூடியிருந்தவர்கள் கிண்டல் செய்தார்கள். இந்தப் போட்டி கூடியிருந்த பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது.
