‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்ட சென்னகேசவலுவிற்கு... ‘13 வயதில்’ மனைவி... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 23, 2019 12:32 PM

ஹைதராபாத் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரில் ஒருவரான சென்னகேசவலுவின் மனைவி 13 வயதே நிரம்பியவர் என்பது தெரியவந்துள்ளது.

Hyderabad Vet Rape Murder Wife Of Accused Just 13 Years Old

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணையின்போது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 28 வயதான சென்னகேசவலுவிற்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய மனைவி 2006ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதும், 13 வயதான அவர் 7ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் நடந்ததும் தெரியவந்துள்ளது.

பெற்றோரை இழந்தவரான அந்தப் பெண் தற்போது சென்னகேசவலுவின் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தினர் ஒரு வாரத்திற்குள் அந்தப் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக என்கவுன்டருக்குப் பின் பேசிய சென்னகேசவலுவின் மனைவி, “எங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை. என்கவுன்டர் நடந்த இடத்திற்கு கூட்டிச் சென்று என்னையும் கொன்றுவிடுங்கள். என் கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது” எனக் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #TELANGANA #HYDERABAD #DISHACASE #CHENNAKESAVULU #WIFE #MINOR #AGE