தமிழகத்தில் இன்று ‘போலியோ’ சொட்டு மருந்து முகாம்.... 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 19, 2020 10:38 AM

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Polio drops camp today in tamilnadu for 43.051 centers

நாடுமுழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் என 1,652 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3,000வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் போலியோ சொட்டு மருந்து முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கைசுண்டு விரலில் மை வைக்கப்படஉள்ளது.

குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் இன்றியமையாத தாகும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Tags : #POLIO #CHILDREN