‘சந்தேகத்தில்’ கணவன் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்... 9 மாத குழந்தைக்கும் தாய்க்கும் நடந்த ‘பயங்கரம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 22, 2019 02:16 AM
ஆந்திராவில் சந்தேகத்தால் கணவனே மனைவியையும், 9 மாத பெண் குழந்தையையும் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள லிங்ககுண்டா கிராமத்தில் கடந்த 3ஆம் தேதி இளம்பெண் ஒருவரின் சடலத்துடன், 9 மாத குழந்தை ஒன்றின் சடலமும் ஏரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கோடீஸ்வர ராவ் என்பவர்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரைப் பிடித்து விசாரித்ததில், எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அவருடைய மனைவி மற்றும் குழந்தை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் மேலும் பல உறையவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலீசாரிடம் கோடீஸ்வர ராவ் அளித்த வாக்குமூலத்தில், குழந்தை தன்னுடையது இல்லை என தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தாலேயே மனைவியையும், குழந்தையையும் அடித்துக் கொலை செய்து எரித்ததாகக் கூறியுள்ளார். கணவனே மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
