சென்னைக்காக 'அள்ளிக்கொடுத்த' அதிரடி இளம்வீரர்... 'நெகிழ்ந்து' போன சிகிச்சை மையம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபகாலமாக சிறந்த பார்மில் இருக்கும் இளம்வீரர் கே.எல்.ராகுல் சென்னை விலங்குகள் நல சிகிச்சை மையம் ஒன்றுக்கு நன்கொடை அளித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிட் என புகழப்படும் ராகுல் பேட்டிங், விக்கெட் கீப்பிங் ஆகியவற்றில் தன்னுடைய சிறந்த பெர்பாமென்ஸை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் விலங்குகள் நல ஆர்வலரும், கே.எல்.ராகுலின் நண்பருமான ஷ்ரவன் கிருஷ்ணன் நன்கொடை குறித்த தகவலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
2 வாரங்களுக்கு முன் ஷ்ரவன் இதுதொடர்பாக ராகுலிடம் பேசியிருக்கிறார். அப்போது ராகுல் பண உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். அதேபோல கடந்த 17-ம் தேதி நடைபெற்ற 2-வது போட்டியில் 'மேன் ஆப் தி மேட்ச்' விருதை வென்ற அவர் அந்த 1 லட்ச ரூபாய் பணத்துடன் மேலும் 1 லட்சம் போட்டு 2 லட்சமாக பெசண்ட் நகரில் உள்ள விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த சிகிச்சை மையம்,'' கே.எல்.ராகுல் இப்படி உதவி செய்வது இது முதல்முறை அல்ல. இதுபோல ஏற்கனவே நிறைய உதவிகள் செய்து எங்களுக்கு அவர் ஆதரவளித்து வருகிறார். இந்த பணம் விலங்குகள் நலவாழ்வு, மருத்துவ பராமரிப்பு, பேரழிவு மற்றும் சிகிச்சை, விலங்குகளை மீட்பது ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும்,'' என தெரிவித்து இருக்கிறது.
