‘குழந்தைங்க’ இருக்காங்கனு... ‘வற்புறுத்தி’ வாங்கிட்டு போனாங்க... ‘அதிரவைக்கும்’ 8 பேரின் ‘மரணம்’... விவரிக்கும் ‘ரிசார்ட்’ ஊழியர்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 23, 2020 10:44 AM

சுற்றுலாவிற்காக நேபாளம் சென்ற கேரளாவைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 Keralites Die Of Suffocation Caused By Heater In Nepal Resort

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான பிரவீன் நாயர், ரஞ்சித் குமார் இருவரும் நண்பர்களுடன் ரீயூனியனுக்குத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இவர்கள் இருவருடைய குடும்பம் மற்றும் வேறு 2 நண்பர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் என மொத்தமாக 15 பேர் சேர்ந்து கடந்த வாரம் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேபாளத்தின் டாமன் நகரில் உள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் 4 குடும்பத்தினரும் தனித்தனியாக அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் ஒரு குடும்பத்தினரின் அறைக்கு காலை உணவுக்காக ரிசார்ட்டில் இருந்து தொடர்ந்து ஃபோன் செய்தும் யாரும் பதிலளிக்காமல் இருந்துள்ளனர். அதனால் சந்தேகமடைந்த ரிசார்ட் ஊழியர்கள் சென்று அறைக்கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு பிரவீன் நாயர், அவருடைய மனைவி சரண்யா, அவர்களுடைய 3 குழந்தைகள், ரஞ்சித் குமார், அவருடைய மனைவி இந்து, அவர்களுடைய குழந்தை ஆகிய 8 பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரிசார்ட் ஊழியர்கள் போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் டாமனில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள காத்மண்டுவிற்கு விமானம் மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு அனைவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருந்த அறையில் இருந்த ஹீட்டர் செயலிழந்து அதிலிருந்த கார்பன் மோனாக்சைடு வெளியேறி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று டாமனில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக இருந்ததால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அறைக்கு ஹீட்டர் வாங்கிச் செல்ல, மற்றொரு குடும்பத்தினரும் குளிரால் அவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள ஹோட்டல் மேனேஜர், “எங்களுடைய ரிசார்ட் அறைகளில் ஹீட்டர்கள் எதுவும் இல்லை. அவர்கள் குழந்தைகளை வைத்திருப்பதால் கண்டிப்பாக எங்களுக்கு ஹீட்டர் வேண்டும் எனக் கேட்டார்கள். நாங்கள் முதலில் மறுப்பு தெரிவித்தும், அவர்கள் வற்புறுத்தினார்கள். பின்னர் இரவு 2 மணியளவில் உணவகத்தில் இருந்த ஹீட்டரை அறைக்கு வாங்கிக் கொண்டு சென்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #NEPAL #KERALA #RESORT #HEATER #FAMILY #BABY