'தயவுசெய்து என் பொண்ணு உடம்ப பார்க்க விடுங்க, அழுது துடித்த தந்தை...' 'தூக்கிப்போட்டு மிதித்து தரதரவென...' வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Feb 27, 2020 04:35 PM

தெலங்கானாவில் தனது மகளின் உடலை பார்த்து தற்கொலைக்கு நீதி கேட்க சென்ற தந்தையை போலீசார் எட்டி உதைத்து, தரதரவென இழுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video of a father attack to see his daughter\'s body

தெலுங்கானா மாநிலம் பட்டஞ்சேருவில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி நிர்வாகத்தின் மனஅழுத்தம் காரணமாக சிறுமி மனச்சோர்வு அடைந்து, உடல்நிலை சரியில்லாமல் போனதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து, பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில்தான், தன் மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி துடித்தபடி தற்கொலை செய்துகொண்ட மகளின் உடலை பார்க்க தந்தை வந்தார். தனது மகளின் தற்கொலைக்கு நீதி கேட்டுக்கொண்டிருந்த அவரை உள்ளே அனுமதிக்க மறுத்த காவல்துறையினர், உதைத்து தள்ளி கேட்டுக்கு வெளியே தள்ளினர். மகளின் உடல் அருகே வைத்து தந்தை தாக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லாத மாணவியை பள்ளி விடுதி நிர்வாகம், வீட்டிற்கு செல்ல அனுமதிக்காததால் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் தாக்குதல் பற்றியும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : #VIRALVIDEO