‘வீட்டில் தகராறு செய்த மகன்’.. ‘கோடாரியை’ கையில் எடுத்த தந்தை.. மதுரையை அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தந்தை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வண்டியூர் அருகே நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அருண்குமார் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. அதனால் அவரை வீட்டில் வைத்து அவரது பெற்றோர் கவனித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அருண்குமார், அவரது தாய் மற்றும் தந்தையை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த கோடாரியால் அருண்குமாரின் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தந்தை முத்துக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் மகனை தந்தை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
