'திடீர்னு நெஞ்சை புடிச்சிட்டு கீழ விழுந்தாரு'...'பதறிய சக காவலர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 09, 2020 09:17 AM

ஊரடங்கு பணியிலிருந்த காவலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Traffic Policeman Dies due to Heart attack on Lockdown duty

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் எனப் பல அரசுத் துறை அதிகாரிகள் தன்னலமின்றி பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் காவலராக இருப்பவர் அருண் காந்தி. இவர் சாந்தோம் பகுதியில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மதியம் 3 மணி அளவில், அருண் காந்தியின் உடல் முழுவலும் திடீரென வியர்த்துள்ளது. சிறிது நேரத்தில் நெஞ்சு வலிக்கிறது எனக் கீழே சரிந்துள்ளார்.

அருண் காந்தி கீழே சரிவதைப் பார்த்த சக காவலர்கள் பதறிப் போய் அவரை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. காவலர் அருண் காந்தியின் மறைவிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காவலர் அருண் காந்தியின் மறைவு சக காவலர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.