16 வயது 'சிறுவனுடன்' திருமணத்துக்கு மீறிய உறவு... கணவர் 'கண்டித்ததால்' விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 08, 2020 11:29 PM

16 வயது சிறுவனுடன் இளம்பெண் திருமணத்துக்கு மீறிய உறவு வைத்திருந்ததை அவரது கணவர் கண்டித்ததால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Women Commits Suicide near Thanjavur Police Investigate

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(36). இவரது மனைவி ஆனந்தி (31). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஆனந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதையறிந்த சிவக்குமார் இந்த உறவு வேண்டாம் என மனைவியை கண்டித்து இருக்கிறார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் அந்த சிறுவனின் பெற்றோர் வந்து ஆனந்தியிடம் தங்கள் மகனுடன் உள்ள தொடர்பை துண்டித்து விடுமாறு கூறி சண்டை போட்டுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த சிவக்குமார் மனைவியை கண்டித்து இருக்கிறார்.

இதனால் மனமுடைந்த ஆனந்தி இரவில் அனைவரும் தூங்கிய பின் எழுந்த ஆனந்தி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகாலை கண்விழித்த சிவக்குமார் மனைவியை காணவில்லை என தேடியபோது அவர் தோட்டத்தில் தூக்கில் தொங்கி இருக்கிறார். தொடர்ந்து அவரை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிவக்குமார் போலீசில் புகாரளிக்க போலீசார் சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.