‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லையில் ஊரடங்கு உத்தரவில் மக்கள் அதிகமாக வெளியே நடமாடுவதை தடுக்கும் பொருட்டு மூன்று முன்னெச்சரிக்கை விதிகளை போலீஸார் அறிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மூன்று விதிகளை கொண்டுவந்துள்ளதாக நெல்லை மாநகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தெரிவித்துள்ளார்.
அதில், முதலாவதாக அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் தவிர வேறு யாரும் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்த தடை, இரண்டாவதாக அத்தியாசிய பொருள்களை வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளே வாங்கிச்செல்ல வேண்டும். இந்த தூரத்துக்கு அதிகமாக செல்பவர்கள் மீது வழக்குத் தொடரப்படும். மூன்றவதாக, பால், மருந்து, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தமிழக அரசின் உத்தரவுப்படி காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும். அதனால் மதியம் 1 மணிக்கு மேலே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கிற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகரில் மாவட்ட ஆட்சியர் உத்திரவுபடிபுதிய விதிமுறைகள் அமல்.
1. மாநகரில் நான்கு சக்கர வாகனம் முழுவதும் தடை
2.அத்தியாவசிய பொருள்வாங்க வீட்டுலிருந்து 2 கிமீ மட்டுமே வரலாம்.
3.பால், காய்கறி என அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே.https://t.co/ybg0EoytUX pic.twitter.com/JduMlkh6NV
— Arjun Saravanan (@ArjunSaravanan5) April 5, 2020
