'விடுமுறையால்' ஊரில் இருந்தபோது... கண் 'இமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கிராமத்தையே 'சோகத்தில்' ஆழ்த்தியுள்ள சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Apr 08, 2020 04:40 PM

தேனியில் ஆடுகளுக்கு மரக்கிளையை முறித்தபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.

Theni 19 YO College Girl Dies After Falling Into Well

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் கவிதா (19). இவர் பழனியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் படித்துவந்த நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டதை அடுத்து, கவிதா சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து கவிதா ஆடுகளுக்கு கொடுக்க மரக்கிளைகளை முறிப்பதற்காக தனியார் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஆலமரத்தில் கிளைகளை முறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 150 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தவறி விழுந்ததில் படுகாயமடைந்த கவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை கயிறு கட்டி மீட்டுள்ளனர்.

இதையடுத்து கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.