‘அவங்களும் மனுஷங்க தானே’!.. ‘மக்கள் மனசாட்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 07, 2020 01:18 PM

இந்த கடுமையான வெயிலில் ஒவ்வொரு காவலர்களும் 8 மணி நேரம் நிற்கிறார்கள், அவர்களும் மனிதர்கள் தானே என முதல்வர் தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

CM Edappadi Palaniswami tweet about Police corona lockdown

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகின்றன. அதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளரக்ள் மற்றும் காவலர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு காவலர் ஒருவர் தனது இரவு உணவை நள்ளிரவு 1.45 மணிக்கு சாப்பிடும் புகைப்படத்தை தமிழக காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதேபோல் இரவு கொசுக்கடிக்கு மத்தியில் தூங்கும் காவலர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் காவலர்களில் நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணிநேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21 நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.