'சிறுமியை' பாலியல் பலாத்காரம் செய்ததாக... வாலிபரை 'ஜெயிலுக்கு' அனுப்பிய தந்தை... அடுத்தடுத்த 'ட்விஸ்ட்டால்' அதிர்ந்து போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்ற மகளை கர்ப்பமாக்கி விட்டு வாலிபரை ஜெயிலுக்கு அனுப்பிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 50 வயது கொத்தனார் ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். 15 வயது சிறுமியான 2-வது மகள் தந்தையுடன் தங்கி இருக்கிறார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கொத்தனார் குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் சிறுமியை விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த செந்தில் (28) என்னும் வாலிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர்.
அப்போது சிறுமியின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த குழந்தையை சிறுமியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். அந்த குழந்தையின் ரத்த மாதிரியும், செந்திலின் ரத்த மாதிரியும் போலீசார் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதில் இரண்டு ரத்த மாதிரிகளும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியிடம் மீண்டும் விசாரணை நடத்த அதில் தன்னுடைய தந்தையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரது தந்தையை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
