கொரோனா எதிரொலி... 'தமிழகத்தில் அறிமுகமானது ஐவிஆர்எஸ் சேவை!'... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 09, 2020 12:46 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.வி.ஆர்.எஸ். சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

cm eps introduces ivrs service as a covid19 relief measure

சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலமைச்சரின் இந்த ஆலோசனைக்குப் பிறகு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐவிஆர்எஸ் என்ற சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் படி, 94999 12345 என்ற தொலைபேசி எண்ணில் குரல்வழி சேவை மூலம் கொரோனா பற்றி விளக்கம் பெறலாம் கொரோனா அறிகுறி நமக்கு இருக்கிறதா? இல்லையா உள்ளிட்டவற்றை குரல்வழி சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சேவையின் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொளி மூலம் கலந்து கொண்டார்.