'ஊரடங்கின்போது' வீட்டு வாசலில் நின்ற '5 பேருக்கு'... இளைஞரால் நேர்ந்த 'கொடூரம்'... வெளிவந்த 'உறையவைக்கும்' காரணம்...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் ஊரடங்கின்போது தன்னுடைய வீட்டு வாசலில் நின்று சத்தமாக பேசியதால் இளைஞர் ஒருவர் 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ரஷ்யாவிலும் சிலபகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
யெலட்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 31 வயது இளைஞர் ஒருவருடைய வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தால், அந்த இளைஞர் வெளியே சென்று அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, அதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன் கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக அவர்களை சுட்டுள்ளார். இதில் 4 ஆண்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
