கணவருக்கு வந்த 'போன்'... 'கஷாயத்தில்' மயக்க மருந்து... 'நாடகமாடிய' மனைவி 'கடைசியில்' கொடுத்த 'ஷாக்'... 'மிரளவைக்கும்' சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Apr 04, 2020 08:14 PM

தூத்துக்குடியில் நகை கொள்ளை போனதாக நாடகம் ஆடிய துறைமுக ஊழியரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Thoothukudi Wife Arrested In Jewel Theft Case In Her Own House

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்த தம்பதி வின்சென்ட் சவேரியார் பிச்சை - ஜான்சி ராணி. இவர்களுடைய 2 மகள்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடைய வீட்டு பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ 20 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக வின்சென்ட் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது ஜான்சி ராணி முன்னுக்குபின் முரணாகவே பதிலளித்து வந்ததால் போலீசாருக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணையில், ஜான்சி ராணி நடத்தி வந்த சீட்டு தொடர்பாக அவருக்கு கடன் பிரச்சனை இருந்துவந்ததும், கணவர் கஞ்சத்தனத்தால் அவருக்கு உதவாததால் நகைகளைத் திருடி விற்று, கடனை அடைக்க திட்டமிட்டு அவர் நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது.

மேலும் நகைகளைத் திருட திட்டமிட்ட ஜான்சி ராணி வேறு ஒரு எண்ணில் இருந்து கணவருக்கு போன் செய்து ஊரடங்கால் பேங்க் லாக்கரில் உள்ள நகைகளுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி நகைகளை வீட்டிற்கு எடுத்து வர வைத்துள்ளார். பின்னர் சம்பவத்தன்று கபசுர கஷாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த அவர், கணவர் மயங்கியதும் நகைகளைத் திருடி வீட்டின் முன் உள்ள காலி இடத்தில் புதைத்து வைத்துள்ளார். இதையடுத்து புதைத்த இடத்திலிருந்து நகைகளை மீட்ட போலீசார்  ஜான்சி ராணியை கைது செய்துள்ளனர்.