'சளி, காய்ச்சல் மாதிரி 'அது'வும் அடிக்கடி வரும்!'... கொரோனாவின் எதிர்காலம் குறித்து விஞ்ஞானிகளின்... பதைபதைக்க வைக்கும்... ஷாக் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ், காய்ச்சல் போன்ற பருவகால தொற்று நோயாக மாறக்கூடும், அது ஒவ்வொரு ஆண்டும் திரும்பும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

சீனாவின் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் 76 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. இந்த நோய்க்கு தற்போது 90,443 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,119 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இத்தாலி மற்றும் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தொற்றின் தாக்கம் சீனாவில் கட்டுப்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. ஆனால், விஞ்ஞானிகள் தற்போது கொரோனா வைரஸ் ஒருபோதும் முற்றிலுமாக வெளியேறாது என்றும், அது சளி, மார்பு நோய்த்தொற்று மற்றும் காய்ச்சல் போன்ற வற்றாத நோயாக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்கள் குளிர்காலத்தில் மிக விரைவாக பரவும் ஆற்றல் உடையனவாக அறியப்படுகின்றன. ஏனெனில், அவை நீண்ட காலம் உயிர்வாழ முடிகிறது. இது மக்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும், இவை ஒவ்வொரு குளிர்காலத்திலும் சுற்றும், குணப்படுத்த முடியாத வைரஸ் நோய்கள். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று சதவீதத்தினரை கொன்ற கொரோனா, அதே அடிச்சுவடுகளைப் பின்பற்றி இயல்பான நோயாக மாறக்கூடும். இவ்வாறு விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
