'பசியில் வெறியான மாமா...' 'உனக்கு வேற ஒரு பொண்ண கட்டி வைக்கிறேன்...' மாமனாரால் மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேச மாநிலத்தில் மருமகள் உணவு சமைக்க தாமதமானதால், மாமனார் மருமகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திடவுரி பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர், அவரது மருமகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டார். இது குறித்து அந்த நபரிடம் விசாரித்த போது அவர் கூறிய விஷயங்கள் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொலை நடந்த தினத்தன்று, தனக்கு பசிப்பதாக மருமகளிடம் கூறியுள்ளார். இதற்கு உணவு தாயாரிப்பதற்காக மருமகளும் சமயலறைக்குள் சென்றுள்ளார். நேரம் அதிகம் ஆகியும் உணவு ரெடியாகவில்லை என்று வெறியான மாமனார், உணவு தயாரிப்பதற்கு இவ்வளவு நேரமா? எனக்கேட்டு மாமனார் மருமகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து கைது செய்யப்பட்டவரின் மகன் கூறும் போது, வரதட்சணை தொடர்பாக தமது மனைவிக்கும் தமது தந்தைக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாகவும் தமது தந்தை அடிக்கடி கூறி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
