பெண்ணின் இன்ஸ்டாகிராம் ‘ஸ்டேட்டஸ்’ பார்த்து... ‘வீடியோ’ அனுப்பிய ‘சென்னை’ மாணவருக்கு... ‘அடுத்தடுத்து’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 28, 2020 06:59 PM

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலமாக கல்லூரி மாணவரை ஏமாற்றி நிர்வாண வீடியோ அனுப்ப வைத்து பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

Chennai Man Cheats Student With Fake Instagram Account

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 20 வயது இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராமை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இன்ஸ்டாகிராம் மூலமாக அவருக்கு ரியா என்ற பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்தப் பெண்ணின் ஸ்டேட்டஸில் பணம் கொடுத்தால் வீடியோ கால் பேசலாம் எனக் கூறப்பட்டிருந்துள்ளது.

இதையடுத்து அந்தப் பெண்ணை தொடர்புகொண்ட அந்த இளைஞரிடம், அவருடைய நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது. அந்த இளைஞரும் வீடியோவை அனுப்ப, பெண் பெயரிலான போலி ஐடியில் பேசிய நபர் வீடியோவை பெற்று கொண்டதும் பணம் கேட்டு அவரை மிரட்டியுள்ளார். ரூ 60 ஆயிரம் பணம் வேண்டுமெனவும், கொடுக்கவில்லை என்றால் இளைஞருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி விடுவேன் எனவும் அவர் மிரட்டியுள்ளார்.

மேலும் 3 வெவ்வேறு வாட்ஸ்அப் எண்கள் மூலமாக அவர் அந்த வீடியோவை அனுப்பி மிரட்ட, பயந்து போன அந்த இளைஞர் 3 தவணைகளாக ரூ 59 ஆயிரம் பணத்தை அந்த நபரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர் தன்னிடம் தொடர்ந்து பணம் பறிக்கக்கூடும் என பயந்த இளைஞர் அயனாவரம் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், இந்தப் புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #COLLEGESTUDENT #INSTAGRAM #CHENNAI