'நடிகையான உங்கப் பொண்ண'... 'கல்யாணம் பண்ணி கொடுக்கலனா'... 'மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது'... 'தாய் கொடுத்த பரபரப்பு புகார்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 29, 2020 09:58 AM

சென்னையில் நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகனை, நடிகையின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Father, Son Arrested for threatening Actress Sruthi

சென்னை முகப்பேரை சேர்ந்தவர்  ராஜசேகரன் மற்றும் அவரது மகன் அமுதன் வெங்கடேசன் ஆகிய இருவரையும், நடிகை சுருதியின்  தாய் சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் அனைத்து மகளிர்  போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தாய் சித்ரா கொடுத்த புகாரில், ‘கைது செய்யப்பட்ட ராஜசேகரன் தூரத்து உறவினர் என்றும், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் நடிகை ஸ்ருதி படித்துக் கொண்டிருக்கும் போது, ராஜசேகரன் மகன் அமுதன் வெங்கடேசன் ஒருதலைப்பட்சமாக காதலித்ததாக தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதாகவும், ஸ்ருதி மற்றும் அவரது தாய் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தனது மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அமுதன் வெங்கடேசன் தொந்தரவு செய்து வந்ததாகவும், இதுதொடர்பாக 4 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் செய்து வைக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோவும் வெளியிட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் கோவையை சேர்ந்த 5 பேர் கும்பலுடன் சேர்ந்து தங்களிடம் பணம் பறிக்க முயன்றதாகவும், இதற்காக தங்கள் மீது பொய் புகார்கள் அளித்து, அதனை திரும்பப் பெறுவது போல நாடகமாடியதாகவும் நடிகை சுருதியின் தாய் சித்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதி வெளிநாட்டிற்கு படிக்கச் சென்று, மீண்டும் சென்னை வரவுள்ள நிலையில், கடந்த 5-ம் தேதி நடிகையின் தாயான சித்ராவை மடக்கி, ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கவில்லை எனில் ஆசிட் வீசுவதாக ராஜசேகரன் மற்றும் அமுதன் வெங்கடேசன் மிரட்டியதாக’ புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரன், அமுதன் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, நடிகை ஸ்ருதி மற்றும் தாய் சித்ரா  ஆகியோர் குடும்பமாக சேர்ந்து 2 வருடங்களுக்கு முன்பாக மேட்ரிமோனியல் மூலமாக பலரையும் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பிய நிலையில், அந்த விவகாரத்தில் ராஜசேகரனுக்கும், அமுதனுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #POLICE #CHENNAI #ACTRESS #ARREST