நம்ம ‘லவ்’ மேட்டர அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்...! ‘ஸ்டாப் ப்ளீஸ்.., இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது...’ காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த ப்ளேபாய்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 10, 2020 06:33 PM

மாற்று திறனாளி பெண்ணை ஏழு வருடம் காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Lover arrested for refusing to marry his girlfriend

மாற்றுத்திறனாளியான பானுமதி பாலவிடுதி அருகேயுள்ள களுத்தரிக்காப்பட்டியை சேர்ந்தவர்.  புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் மற்றும் பானுமதி ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமண வயதிற்கு மேலே செல்வதால் பானுமதியின் பெற்றோர் அவர்களை கல்யாணம் செய்ய வற்புறுத்தி உள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறிய கண்ணன் அதற்கான ஏற்பாட்டை செய்யும்படி பானுமதியிடம் கூறி, தன்னுடைய பெற்றோருக்கு திருமணம் குறித்து தெரியப்படுத்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.  திடீரென பானுமதியை தொலைபேசியில் அழைத்து நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பானுமதி அதற்கான காரணங்களை கேட்டுள்ளார். கண்ணன் எந்த காரணங்களையும் சரி வர சொல்லாததால் சந்தேகமடைந்த பானுமதி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில் தனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கயல்விழி என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாக கூறியுள்ளார் கண்ணன். அதுமட்டும் இல்லாமல் இதுபோல பல பெண்களை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கண்ணனை கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags : #LOVE