போதை ‘வெறியில்’... மொத்த ‘குடும்பத்திற்கும்’ ஒரே ‘நாளில்’ நேர்ந்த பயங்கரம்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் குடும்பத்தினர் 5 பேரை கொலை செய்தவருக்கு 17 ஆண்டுகள் கழித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஏபெல் ஒச்சா என்பவர் கொகெய்ன் போதைக்கு அடிமையாகி கடந்த 2002ஆம் ஆண்டு தனது மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் 5 பேரைக் கொலை செய்த சம்பவம் டலாஸையே உலுக்கியது. சம்பவத்தன்று போதை வெறியில் இருந்த ஏபெல் ஒச்சா, தன் மனைவி செசிலியா (32), மகள் கிறிஸ்டல் (7), 9 மாதக் குழந்தையான அனாஹி, மனைவியின் தந்தை பார்ட்டலோ அல்வீஸோ (54) மற்றும் மனைவியின் தங்கை ஜாக்குலின் (20 ஆகியோரைக் கதறக் கதற சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரத்தை செய்துவிட்டு தலைமறைவான ஏபெல் ஒச்சாவை ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றபோது போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் விசாரணையில் தன் குடும்பத்தைக் கொலை செய்ததே தனக்குத் தெரியாது, நியாபகத்தில் இல்லை என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை 17 ஆண்டுகள் கழித்து நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏபெல் ஒச்சாவிற்கு விஷ ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பார்க்க அவருடைய உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது உறவினர்களிடம் பேசிய அவர், “என்னால் ஏற்பட்ட வலிக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். உங்கள் அனைவரையும் என் சகோதரி போலவே நினைக்கிறேன். என்னை மன்னித்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். பின்னர் அவருக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
