'ஆழ்துளை கிணற்றில் இருந்து பயங்கர சத்தம்...' '15 அடி குழிக்குள் இருந்தவர் என்ன ஆனார்...?' பதபதைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் மரவந்தே கிராமத்தில் ஆழ்துளையில் சிக்கிய இளைஞர் ரோஹித் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் ரோஹித் என்பவர் ஆழ்துளை குழி தோண்டும் வேலை செய்து வருகிறார். உடுப்பி மாவட்டத்தில் உள்ள விவசாய கிராமமான மரவந்தே கிராம பகுதிக்கு ஆழ்துளைப் பணிக்காக சென்றுள்ளனர்.
வேலை செய்யும் போது தடுமாறி 15 அடி குழியில் விழுந்த ரோஹித் பல மணி நேரமாக கத்தி கொண்டு இருந்துள்ளார். பிறகு அங்கு வேலை செய்து கொண்டிருந்த உடன் இருந்தவர்கள் குழியிலிருந்து சத்தம் வரவே பதற்றத்துடன் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
ரோஹித்தை மீட்க தீயணைப்பு படை மீட்பு குழு, குழிக்கு பக்கத்தில் இன்னொரு பள்ளத்தை தோண்டினர். துருதிஸ்டவசமாக புதிதாக தோண்டிய பள்ளம் உள்ளுக்குள் சரிந்ததால் அவரை எளிதில் மீட்க முடியாமல் போனது. ஆனால், தொய்வடையாத மீட்பு குழுவினர் வெவ்வேறு முறையை பயன்படுத்தி பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞரை பாதுகாப்பாக மீட்டனர்.
போர்வெல் குழியில் இருந்து வெளிவந்த ரோஹித் எந்தவித சலனமின்றி மிகவும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் காணப்பட்டார். அதைக்கண்ட அப்பகுதி மக்களும் மகிழ்ந்தனர்.