‘திடீரென கேட்ட சப்தம்’... ‘மனைவியை காப்பாற்ற ஓடிய கணவர்’... ‘கடைசியில் நடந்தேறிய கொடூரம்’... ‘துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 12, 2020 08:27 PM

வீட்டின் வெளியே இருந்த மின்சாரப் பெட்டி வெடித்து தீ விபத்தில் சிக்கிய இளம் மனைவியை காப்பாற்ற போன கணவர், விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபாத்தான நிலையில் போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Husband Suffers Severe Burn Injuries while Try to Save Wife

கேரளாவைச் சேர்ந்தவர் 32 வயதான அனில் நினான் (Anil Ninan). இவர் தனது மனைவி நீனு (Neenu) மற்றும் 4 வயது மகனுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள உம் அல் குவைன் (Umm Al Quwain) நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இவர்களது வீட்டிற்கு வெளியே காரிடாரில் (Corridor) இருந்த மின்சாரப் பெட்டி (Electric Box) மின் கசிவு காரணமாக வெடித்து சிதறி தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது காரிடாரில் இருந்த மனைவி நீனுவை காப்பாற்ற, பெட்ரூமில் இருந்து அனில் நினான் பதறியடித்தப்படியே ஓடிவந்துள்ளார். தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற போராடியபோது, அனில் நினான் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் தம்பதி இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தீ விபத்தில், 10 சதவிகித காயங்கள் அடைந்த நிலையில், தற்போது மனைவி நீனு உடல்நிலை தேறி வருவதுடன் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார். 

ஆனால் மனைவியை காப்பாற்ற போராடிய கணவர் அனில் நினான் 90 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்பதி இருவரும் தீப்பிடித்து காயங்கள் அடைந்ததை அறிந்த அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன், அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #HUSBANDANDWIFE #UAE