திடீரென ‘பயங்கர’ சத்ததுடன் ‘வெடித்த’ குண்டு... ‘அலறியடித்து’ ஓடிய கூட்டம்... ‘நீதிமன்றத்தில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 13, 2020 02:20 PM

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் திடீரென குண்டு வெடித்ததில் வக்கீல்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

UP Bomb Explodes At Lucknow Court Several Lawyers Injured

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் இன்று மதியம் திடீரென பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் வக்கீல்கள் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த குண்டு வீச்சு சம்பவம் வக்கீல்களுக்கு இடையேயான போட்டியின் காரணமாக நடந்திருக்கலாமென முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Tags : #UTTARPRADESH #LUCKNOW #COURT #BOMB #EXPLOSION #LAWYERS