'இது என்னோட குழந்தை இல்ல'... 'தாய் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'கடைசியில் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 11, 2020 12:22 AM

பெற்ற குழந்தையை, தந்தை கொலை செய்ததாகக் கூறிய நிலையில், தாயே நீரில் மூழ்கடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Mother Sushmita Killed her Son Vikas Due to Family issue

அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாப்பட்டியில் அரசுப் பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ், சுஷ்மிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன் விகாஸ் கடந்த 5-ம் தேதி மாலை தாய் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. குழந்தையைப் பார்த்து கதறி அழுத தாயும், தாத்தா சூசை மாணிக்கமும்,  தந்தை அமல்ராஜே குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றியதுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாய் சுஷ்மிதாவே, குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது. விசாரணையில்,  சுஷ்மிதா 2018-ம் ஆண்டு காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து கொண்டிருந்தபோது அமல் ராஜூடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா கர்ப்பமானார். பின்னர் சுஷ்மிதா- அமல்ராஜ் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சுஷ்மிதாவுக்கு 11 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில், சுஷ்மிதாவுக்கு அவரது அத்தை மகன் ராஜேஷ் உடன் இருந்த உறவு குறித்து அமல்ராஜ் கேட்க அதை சுஷ்மிதா ஒப்புக் கொண்டார். இதனால் அமல்ராஜ் மனைவியிடம் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தை பிறந்து 7 மாதங்களாகியும் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையை பார்க்க வரவில்லை என்று அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் மீண்டும் இருவருக்கும் பிரச்சினை வர சுஷ்மிதாவின் தந்தை மதுரை சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு அளித்தார். இதன்பேரில் நடந்த விசாரணைக்கு பின்னர் தைப் பொங்கலை முன்னிட்டு சுஷ்மிதா, அமல்ராஜ் வீட்டிற்கு சென்று உள்ளார். இருப்பினும் அமல்ராஜ் பெற்றோர் லூகாஸ்-விமலா குழந்தையை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும், குழந்தை இருப்பது தனக்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாக அமல்ராஜ் கூறியதாகவும் தெரிகிறது.

மேலும், குழந்தையை கொன்றுவிட்டு வந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று அமல்ராஜ் கூறியதாகவும் கூறப்படுகறிது. இதனால், குழந்தையை கொன்றுவிடுமாறு, சுஷ்மிதாவின் பெற்றோர் கூறவே, தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்து விட்டு தாய் சுஷ்மிதா நாடகமாடியுள்ளார். இந்த தகவல்களை போலீசார் விசாரணையில் சுஷ்மிதா ஒப்புக்கொள்ள, குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களது பெற்றோர் உள்பட 5 பேரை கைதுசெய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவான ராஜேஷை  தேடி வருகின்றனர்.

Tags : #MURDER #MOTHER #SON #HUSBAND