லாரி - பைக் மோதியதில் தூக்கி ‘வீசப்பட்டு’... நொடிப்பொழுதில் ‘தீப்பிடித்து’ எரிந்த வாகனம்... கோர விபத்தில் ‘கல்லூரி’ மாணவருக்கு நேர்ந்த ‘சோகம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 13, 2020 12:41 PM

கன்னியாகுமரியில் லாரியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Kanyakumari College Student Died In Lorry Bike Accident

திருவட்டாறு அருகே உள்ள மாத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்ராஜ் (19). கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்துவந்த இவர் நேற்று மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது திருவனந்தபுரத்திலிருந்து சங்கரன்கோவில் நோக்கி போய்க்கொண்டிருந்த லாரியும், வினோத்ராஜின் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டுள்ளன.

இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட வினோத்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிய, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர். பின்னர் வினோத்ராஜின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.