'குழந்தைகள் காப்பகத்தில்'... மளமளவென பற்றிய தீ... '15 குழந்தைகள்' பரிதாபமாக உயிரிழப்பு... பதைபதைக்க வைக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 15, 2020 09:39 AM

குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 children killed in orphanage home fire at mexico

மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை உடைய அந்த காப்பகத்தில் சுமார் 66 குழந்தைகள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. மிக வேகமாக தீ பரவியதால், இரண்டாவது தளத்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில், பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த தீவிபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tags : #FIREACCIDENT #ORPHANAGE #CHILDREN