“காஸ் அடுப்பை சரிசெய்துவிட்டு இளைஞர் செய்த காரியம்”.. “ஒரு நொடியில்”.. “நடந்து முடிந்த பயங்கரச் சம்பவம்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 30, 2020 10:15 AM

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை சேர்ந்தவர் காளியப்பன் (25).  ஊர் ஊராக சென்று கேஸ் அடுப்பை சரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் அதே மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்துக்கு சென்று அங்குள்ள உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த நடராஜன்(60) என்பவரின் வீட்டில் அடுப்பினை சரிசெய்ய முயன்றார்

cylinder gets blasted during gas burner repairer checking

நடராஜனின் வீட்டில் அவருடைய மனைவி அன்னியம்மாள் (60) இருவரும் வசித்து வந்தனர். கேஸ் அடுப்பை சரிசெய்த பின்னர் காளியப்பன், சரி செய்யப்பட்ட அடுப்பு எரிகிறதா என்று பரிசோதித்துப் பார்த்தபோது கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் சிறிது நேரத்திலேயே சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது.

இதனையடுத்து உடனே அங்கிருந்து மூவரும் தப்பி ஓட முயன்றனர். எனினும் அவர்கள் மீதும் தீப்பற்ற தொடங்கியதோடு அந்த வீட்டின் தளமும் இடிந்து அவர்களின் மீது விழுந்தது. இதே நேரத்தில் அருகில் இருந்த பள்ளியில் அமர்ந்திருந்த சோளிங்கரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியை முல்லை(45) மீதும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதில் ஆசிரியை முல்லை மட்டும் வேலூரில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அனுப்பி வைக்கப்பட்டதோடு, நடராஜன், அன்னியம்மாள், காளியப்பன் 3 பேரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #GAS #BURNER